உலகம்

 கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மீண்ட தென்கொரியா !

 கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மீண்ட தென்கொரியா !

webteam
தொடக்கத்தில் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த தென்கொரியா தனது, வித்தியாசமான மருத்துவ யுத்தி மூலம் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. 
உலகின் மற்ற நாடுகளைப் போலவே தென்கொரியாவும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பிப்ரவரி 18 ஆம் தேதி தென்கொரியாவில் முதலாவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் நாள்தோறும் 900க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. கொரோனா பாதிப்பில், சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலிருந்தது தென் கொரியா. 
வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பதைச் சுதாரிக்கத் தொடங்கிய தென்கொரியா, கொரோனா வைரஸை எதிர்த்துப்போராட தயாரானது. பல்லாயிரக்கணக்கானோரைக் குறுகிய காலத்தில் சோதனை செய்யும் வசதி நாடு முழுவதும் உருவாக்கப்பட்டது. அதாவது மருத்துவமனைகளில், தொலைபேசி வழியே ஆலோசனை கேட்பதற்காகத் தனி அறை உருவாக்கப்பட்டது. 
கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தவர்கள், ஆரம்பக்கட்ட சோதனைக்குப் பிறகு குறிப்பிட்ட அறைக்குச் சென்றனர். அங்கிருந்து தொலைபேசி வாயிலாக, மருத்துவப் பணியாளர்களுடன் அவர்கள் உரையாடினர். இதனால், நேரில் கூறமுடியாத சில விஷயங்களை நோயாளிகள் தொலைபேசி மூலம் தெரிவித்ததால், சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டன.
இது வழக்கமான சோதனையைவிட 10 மடங்கு வேகமாகச் சோதனை செய்வதற்கு வழிவகுத்தது. இதன்மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வேகமாகத் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.