உலகம்

டாப் செல்லரான ஹிட்லரின் புத்தகம்

டாப் செல்லரான ஹிட்லரின் புத்தகம்

webteam

சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதையான ’மெயின்காம்ப்’ புத்தகம் 2016ம் ஆண்டில் ஜெர்மனியில் அதிகம் விற்பனையான புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாஜி கருத்துகளை விதைத்து வெறுப்பு அரசியலை முன்னெடுத்த ஹிட்லர், தனது கருத்துகள் மற்றும் வாழ்க்கைப் பதிவுகளை ’மெயின்காம்ப்’ (எனது போராட்டங்கள்) என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருந்தார். இந்த புத்தகம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் புதிய வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டது. சுமாரான விற்பனையாகவே இருக்கும் என்று கருதப்பட்ட இந்த புத்தக விற்பனை, பதிப்பாளரே ஆச்சயமடையும் வகையில் உச்சத்தைத் தொட்டது. இலக்கியம் அல்லாத புத்தக விற்பனையில் அதிகபட்சமாக தி ஹிடன் லைஃப் ஆப் ட்ரீஸ் என்ற புத்தகம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையானதே ஜெர்மனியில் அதிகபட்சமாக இருந்து வருகிறது. ஹிட்லரின் மெயின்காம்ப் புத்தகம் இதுவரை 85,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகளை அதிகம் ஏற்கும் நாடாக இருக்கும் ஜெர்மனியில், அரசின் இந்த முடிவுக்கு எதிராக மக்களிடையே சலசலப்பு கிளம்பி வருவதாக கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஹிட்லரின் கருத்துகளைத் தாங்கிய புத்தக விற்பனை சூடுபிடித்து வருவதை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் பார்க்கிறார்கள்.