உலகம்

இனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்!

இனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்!

webteam

'ஃபேர் அண்ட் லவ்லி’என்ற அழகுசாதன பொருளில் இருக்கும் ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கி அதற்குப் பதிலாக க்ளோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்போவதாக அதனைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் பெண்கள், மற்றும் ஆண்கள் எனப் பாலின வேறுபாடு இல்லாமல் மிக அதிக அளவு உபயோகிக்கப்படும் அழகு சாதன பொருள் ‘ஃபேர் அண்ட் லவ்லி’.இது ஒரு ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்களின் தயாரிப்பு பொருளில் உள்ள ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கப் போவதாக அந்நிறுவனம் கூறியது. இந்த முடிவுக்கு விளக்கம் தந்த அந்நிறுவனம் “கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு” எனப் பொருள் தரும்படி அழகு சாதன பொருளின் பெயர் அமைந்துள்ளதால் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறியது.

இந்நிலையில் தற்போது அழகு சாதன பொருளில் இருக்கும் ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கி அதற்குப் பதிலாக க்ளோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்போவதாக அதனைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ இந்தியாவில் விற்கப்படும் தங்களது இரண்டு தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துப்போவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஹிந்துஸ்தான் இந்த முடிவுக்கு வந்தது. இந்தியாவில் மட்டும் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ என்ற அழகு சாதன பொருள் ஏறக்குறை ஆண்டிற்கு 560 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.