ஜப்பானில் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது பல்வேறு துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டது அந்த நாட்டு மக்களை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் ஜப்பானிலும் துப்பாக்கி காலசாரம் பரவத் தொடங்கியுள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 12.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜப்பானில் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது பல்வேறு துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடந்துள்ளன. அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தவை:
1990: அப்போதைய நாகசாகி நகர மேயர் மோடோஷிமா ஹிட்டோஷி பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் காயமடைந்தார்.
1992: டோக்கியோவின் வடக்கே டோச்சிகி ப்ரிபெக்சரில் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் அப்போதைய துணை தலைவர் கனேமாரு ஷின்வை நோக்கி வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பித்தார்.
1994: முன்னாள் பிரதமர் ஹோசோகாவா மொரிஹிரோ, டோக்கியோ ஓட்டலில் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரால் சுடப்பட்டார். இதில் அவர் காயமின்றி தப்பித்தார்.
1995: தேசிய போலீஸ் அமைப்பின் அப்போதைய கமிஷனர் ஜெனரல் குனிமட்சு தகாஜி துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
2007: நாகசாகி மேயர் இட்டோ இட்சோ துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தான் நேற்று ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது சோகமான செய்தி.
இதையும் படிக்கலாம்: இதயத்தில் பாய்ந்த புல்லட்; மிரண்டுபோன டாக்டர்கள்.. ஷின்ஸோ அபே கொலை பற்றி ஷாக் ரிப்போர்ட்!