உலகம்

”நான் திரும்பவும் ஸ்கூலுக்கு போறேன்” - மகிழ்ச்சியில் கிரெட்டா தன்பெர்க்

”நான் திரும்பவும் ஸ்கூலுக்கு போறேன்” - மகிழ்ச்சியில் கிரெட்டா தன்பெர்க்

webteam

பருவநிலை மாறுபாடு குறித்து பரப்புரை மேற்கொண்டு கவனம் ஈர்த்த கிரெட்டா தன்பெர்க் தற்போது மீண்டும் பள்ளிக்குத் திரும்பியிருக்கிறார்.

கடந்த வருடம் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து, உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டவர் கிரெட்டா தன்பெர்க். அவர் தற்போது ஒரு வருட காலத்திற்குப் பிறகு  மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

தான் மீண்டும் பள்ளி செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரெட்டா தன்பெர்க் “ பள்ளிக்கான எனது ஒரு வருட இடைவெளி முடிந்து விட்டது. தற்போது மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது மகிழ்ச்சிகரமாக உள்ளது” என்று கூறி அதில் பள்ளி பை மற்றும் சைக்கிளுடன் பள்ளிக்குச் செல்லும் படத்தை இணைத்துள்ளார். 

கடந்த வருடம் உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு குறித்து பரப்புரை மேற்கொண்ட அவர், கார்பன் உமிழ்வை பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்த அட்லாண்டிக் பகுதிக்கு கப்பல் பயணம் மேற்கொண்டது அதிக கவனம் ஈர்த்தது.

கொரோனாத் தொற்று குறித்தும் கருத்து தெரிவித்த கிரெட்டா “ மக்கள் கொரோனாத் தொற்றையும், பருவநிலை மாறுபாடையும் சம அளவில் கையாள வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.