உலகம்

வெள்ளத்தில் 15 பேர் பலி: கிரீஸ்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு

வெள்ளத்தில் 15 பேர் பலி: கிரீஸ்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு

webteam

கிரீஸில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய துக்க தினம் அனுச‌ரிக்கும்படி அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கிரீஸ் நாட்டிப் ஏதென்ஸ் நகரின் மேற்குப் பகுதியில் மலை அடிவார தொழில் நகரங்களான நியா பெராமோஸ் மற்றும் மந்த்ராவை இரவோடு இரவாக திடீரென வெள்ளம் சூழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் மூதியோர் என்றும், வீடுகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மலைப் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

முக்கிய சாலைகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந்துள்ளது. நகர கட்டமைப்புகளை திறம்பட திட்டமிடாததே உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. உயிரிழப்பை தொடர்ந்து ஒருநாள் துக்கம் அனுசரிக்க கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.