ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் திட்டங்களில் கூகுள் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இன்றைய ஆண்ட்ராய்டு உலகில் ஆப்ஸ் (மொபைல் அப்ளிகேஷன்) இல்லாமல் எந்தவொரு மொபைலும் இருப்பதில்லை என்றே கூறலாம். உலகின் பெரும்பாலான மொபைல் ஃபோன்கள், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கி வருகின்றன. நேற்று நடந்த வருடாந்திர கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில், கூகுளுக்கான டிஜிட்டல் அசிஸ்டன்ட் மற்றும் கூகுளின் பிரபல ஃபோட்டோ ஆப் ஆகியவற்றிற்கான புதிய சிறப்பம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ”500 மில்லியன் பயனாளர்கள் ஃபோட்டோ ஆப்ஸ்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்துவதற்காக ஃபோட்டோக்களை அப்லோட் செய்தால், ஃபோட்டோ ஆல்பமாகப் பெறும் சிறப்பம்சத்தை தருவதற்கான பரிந்துரைகள் செயல்பட்டு வருகிறது. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் கவனம் செலுத்தி வரும் கூகுள், ஆப்ஸ்களிலும், டிஜிட்டல் உதவிகளிலும் கவனம் செலுத்தும்” எனத் தெரிவித்தார்.