உலகம்

ஆற்றில் நீந்தி அலுவலகம் செல்லும் ஜெர்மனி இளைஞர்

ஆற்றில் நீந்தி அலுவலகம் செல்லும் ஜெர்மனி இளைஞர்

webteam

ஜெர்மனியின் முனிச் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வண்ணம் தினமும் ஆற்றில் நீந்தி அலுவலகம் சென்று வருகிறார். 

இசார் நதியில் தினமும் 2 கி.மீ. தூரம் நீந்தி அலுவலகம் செல்லும் பெஞ்சமின் டேவிட், சாலைவழியாக செல்வதை விட இந்த பயணம் எளிதாக இருப்பதாகக் கூறுகிறார். லேப்டாப், ஆடைகள் மற்றும் ஷூ ஆகியவற்றை தண்ணீர் புகாத பையில் பேக் செய்யும் டேவிட், நீச்சலுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடையுடன் நீந்திச் செல்கிறார். சில சமயம் சாலைகளில் செல்பவர்கள் தம்மை கேலி செய்து சிரிப்பதாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறுகிறார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி மனஉளைச்சலுக்கு ஆளாவதைவிட இந்த நீச்சல் பயணம் வேகமாகவும், மனதுக்கு இதமாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்.