ஜெர்மனியின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், எதிர்கட்சியாக இருந்த சமூக ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி நகர்கிறது.
ஜெர்மனியின் பிரதமராக உள்ள ஆங்கெலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் யூனியன் பிளாக் கட்சியும் இடதுசாரி சமூக ஜனநாயக கூட்டணியும் போட்டியில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி 25.7% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது.
பிரதமர் ஆங்கெலா மெர்க்கலின் யூனியன் பிளாக் கட்சி 24.1% வாக்குகளை மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளது. தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உள்ளது. எனவே பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகளை தொடங்கியுள்ளது.