உலகம்

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கை.. சர்வதேச ஒத்துழைப்பிற்கு இந்தியா கோரிக்கை..!

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கை.. சர்வதேச ஒத்துழைப்பிற்கு இந்தியா கோரிக்கை..!

Rasus

பொருளாதார குற்றங்களை புரிந்துவிட்டு தப்பிச்செல்லும் குற்றவாளிகள் மீதான நடவடிக்கைக்காக ஜி20 மாநாட்டில் 9 அம்சங்களை இந்தியா முன்வைத்துள்ளது.

ஜி 20 மாநாட்டில் சர்வதேச வர்த்தகம், சர்வதேச நிதி மற்றும் வரி அமைப்பு குறித்த கூட்டம் நடந்தது. அப்போது, பொருளாதார குற்றங்களை புரிந்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்லும் குற்றவாளிகள் மீதான நடவடிக்கை குறித்த 9 அம்சங்களை பிரதமர் நரேந்திர மோடி தாக்‌கல் செய்தார்.

இதன்படி, பொருளாதார குற்றம் புரிந்தவர்களை விரைவில் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல், சொந்த நாடுகளில் அவர்கள் மீதான குற்றங்களின் விசாரணையை விரைவு படுத்துதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கோரப்பட்டது. பொருளாதார குற்றவாளிகளுக்கு தஞ்சம் அளிக்காமல் இருக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை உருவாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார குற்றவாளிகள் குறித்த தகவல்கள் பரிமாற்றத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் வைத்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டறிவது, பறிமுதல் செய்வது போன்றவற்றுக்கான அடித்தளம் அமைக்க, ஜி20 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.