தடுப்பூசி சான்று கட்டாயம் உள்ளிட்ட கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகள் சர்வாதிகாரப் போக்கு மற்றும் மக்களை பாகுபடுத்தும் செயல் எனக்கூறி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேரணி நடைபெற்றது.
அதில், சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பொது இடங்களுக்கு வர பிரான்ஸ் அரசு கட்டுப்பாடுகள் விதிப்பது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் என்றும், அது தெரியாமல் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பாரிஸ் மட்டுமல்லாமல், பிரான்ஸின் பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.