உலகம்

நடுவானில் நிலைகுலைந்த விமானம் : 10 பயணிகள் காயம்

நடுவானில் நிலைகுலைந்த விமானம் : 10 பயணிகள் காயம்

webteam

துபாய் விமானம் ஒன்று நடுவானில் நிலைகுலைந்ததில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறக்கத் தொடங்கியது. அதில் பிரிஸ்டினா, கோசோவோ ஆகிய இடங்களிருந்து பாசெல் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு பலர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு அரை மணி நேரத்தில், விமானம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு குலுங்கியது. இதனால் விமானத்திற்குள் உணவு வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பணிப்பெண் ஒருவர் மேலே தூக்கி வீசப்பட்டார். அவர்கொண்டு வந்த சூடான காஃபி, பழச்சாறுகள், குளிர்பானங்கள் மற்றும் உணவுகள் பயணிகள் மீது கொட்டியது. 

அத்துடன் இருக்கையில் இருந்த பயணிகள் சிலரும் அங்கும், இங்குமாய் விமானத்திற்குள் மோதிக்கொண்டனர். இதில் 10 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் விமானத்தில் பயணித்த ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் கூறும்போது, “விமானம் குலுங்கியதும் நாங்கள் இறக்க போகிறோம் எனப் பயந்தேன். எனது கணவர் கழுத்தில் சூடான காஃபி கொட்டியதில் வெந்துபோனது” என்று தெரிவித்தார்.