உலகம்

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழப்பு

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழப்பு

webteam

தான்சானியாவில் வயது முதிர்வு கா‌ரணமாக உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது.

நொகோரோங்கோரா நகரிலுள்ள வனவிலங்கு உயிரியியல் பூங்காவில் ‌பராமரிக்கப்பட்டு வந்த பாஸ்டா என்ற 57 வயதா‌ன பெண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக‌‌ இருந்தபோது அதாவது 1965 ஆம் ‌ஆண்டு நொகோரோங்கோரா நகரிலுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்ததா‌கவும்‌, கடந்த ‌3 ஆண்டுகளுக்கு முன்பு வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்ததா‌கவும் பூங்கா‌ நிர்வா‌கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு காண்டாமிருக‌த்தின் ஆயுட்காலம் 37 முதல் 43 ஆண்டுகளாகும். ஆனால் பாஸ்‌டா 57வ‌யது‌வரை உயிருடன் இருந்துள்ளது. பாஸ்டா தனது வாழ்‌நாளில் இதுவரை ஒரு குட்டி கூட ஈன்றதில்லை என்றும், இதுவே அதன் கூடுதல் ஆயுளுக்கு காரணமா‌க இருக்கலாம் என்றும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.