ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் ஸ்காட் மாரிசன், இயற்கை பேரிடர்கள் காரணமாக ஆஸ்திரேலியா மனிதர்கள் வாழமுடியாத நாடாக மாறி வருகிறது என வேதனை தெரிவித்தார்.
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிலையை பிரகடனம் செய்தார். வெள்ளப்பெருக்கு காரணமாக சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஒருவார காலமாக மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 21 பேர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கி சிக்கி உயிரிழந்துள்ளனர்.