உலகம்

கொரோனா அச்சத்தால் கரை சேர முடியாமல் நடுக்கடலில் 18 கப்பல்கள் சிக்கித் தவிப்பு

கொரோனா அச்சத்தால் கரை சேர முடியாமல் நடுக்கடலில் 18 கப்பல்கள் சிக்கித் தவிப்பு

webteam
கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சூழலில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 சொகுசு கப்பல்கள் கரை சேர முடியாமல் நடுக்கடலிலேயே சிக்கித் தவித்து வருகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் தனது எல்லைகளை மூடி அனைத்து போக்குவரத்து சேவைகளையும் தடை செய்துள்ளன. மேலும் வெளிநாட்டுப் பயணிகளை பெரும்பாலான நாடுகள் உள்ளே அனுமதிப்பதில்லை. இந்நிலையில் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களைப் பல நாடுகள் திருப்பி அனுப்புகின்றன. இதனால் சொகுசு கப்பலிலிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 
கடந்த மார்ச் 21 ஆம் தேதி, அமெரிக்கச் சொகுசு கப்பல் ஜம்தானை, சிலி உள்ளே அனுமதிக்காததால் கப்பலிலேயே 4 வயது  பயணி உயிரிழந்துள்ளார். மேலும் அந்த கப்பலிலிருக்கும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் இருக்கும் 138 பேருக்குச் சுவாச நோய் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்தாவிட்டால் கப்பலிலுள்ள அனைவரும் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
இதுபோன்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 சொகுசு கப்பல்கள் நடுக்கடலிலேயே பயணிகளுடன் தவித்துவருகின்றன. அவற்றை மீட்பதற்கு இதுவரை எந்த நாடுகளும் முன்வரவில்லை.