ஸ்பெயினின் லா பால்மா தீவில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
லா பால்மா தீவில் கும்ப்ரே வியாகா எரிமலை கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவிக்கின்றன. இவற்றுக்கு ட்ரோன் மூலம் உணவு வழங்கும் பணியை ஸ்பெயின் அரசு மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாது என்பதால் நாய்களை தற்போதைக்கு மீட்க முடியாது. எனவே அவற்றுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதாக ஸ்பெயின் அரசு கூறியுள்ளது.