6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தடை விதித்துள்ளார்.
புதிய உத்தரவுபடி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே விசா பெற்றிருந்தால், இந்த தடை உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்த 90 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஈராக், ஈரான் உள்ளிட்ட 7 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய கடந்த ஜனவரியில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்நிலையில், தற்போது ஈராக் தவிர மற்ற 6 நாடுகளுக்கு தடை விதித்து புதிய உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.