உலகம்

வடகொரியா மீதான பொறுமையை இழந்துட்டோம்: டிரம்ப்

வடகொரியா மீதான பொறுமையை இழந்துட்டோம்: டிரம்ப்

webteam

வடகொரியா மீது காட்டிய பொறுமையை அமெரிக்‍கா இழந்துவிட்டதாக அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா. சபையின் பொருளாதார தடை ஆகியவற்றை மீறி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா அடிக்‍கடி நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்‍காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து முக்‍கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், வடகொரியா, மனித உயிர்களுக்‍கு மதிப்பு அளிப்பதில்லை. எனவே, வடகொரியா மீது காட்டிய பொறுமையை அமெரிக்‍கா இழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த பிரச்சனையை அமெரிக்‍காவும், தென்கொரியாவும் மிக முக்‍கிய பிரச்னையாக கருதுவதாக தெரிவித்த தென்கொரிய அதிபர், வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்‍கு கடுமையான பதிலடி கொடுக்‍கப்படும் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.