உலகம்

நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!

நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!

webteam

எத்தியோப்பியாவில் 10 செமீ அளவுடைய 122 ஆணிகளை மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

நோயாளி ஒருவர் கடந்த 10 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துவந்துள்ளார். சரியான சிகிச்சை எடுத்து வந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக கிகிச்சையும், மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. மனம் பிறழ்ந்த அவர் கையில் கிடைப்பதையெல்லாம் உட்கொண்டுள்ளார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு  ஆடிஸ் அபாபாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 

அவரை பரிசோதித்த டாக்டர் டேவிட் ட்யர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நோயாளியின் வயிற்றில் இருந்து 10செமீ அளவுடைய 122 ஆணிகளை எடுத்துள்ளனர். மேலும் கண்ணாடி துண்டுகள், பல் குத்தும் குச்சி என சில கூர்மையான பொருட்களையும் நீக்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய மருத்துவர் டேவிட், மனநலம் பாதிக்கப்பட்ட அவர் மருந்து எடுப்பதை நிறுத்திவிட்டார். அதனால் கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் அவர் உட்கொண்டுள்ளார். கூர்மையான பொருட்களை அவர் தண்ணீர் குடித்து விழுங்கியிருக்க வேண்டும். கூர்மையான பொருட்களை உட்கொண்டாலும் நல்வாய்ப்பாக அவரது வயிற்றுப்பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.