இந்தோனேஷியாவில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 6கிலோ பிளாஸ்டிக் வெளியே எடுக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் ஜகர்ட்டா பகுதியில் இறந்த நிலையில் திமிலங்கலம் ஒன்று மீட்கப்பட்டது. 31 அடி நீளமுள்ள திமிலங்கத்தின் வயிற்றுப்பகுதியில் இருந்து 6 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. 115 பிளாஸ்டிக் கப்கள், 25 பிளாஸ்டிக், 2 பிளாஸ்டிக் காலணிகள், நைலோன் சாக்குகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளால் தான் திமிங்கலம் உயிரிழந்தது என்று உறுதியாக கூறமுடியாது என்றும், ஆனால் கடல் மாசு கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏதோ ஒருவழியில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கடல் உயிரினங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்படி 260 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியா, கடல் மாசில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா வருடத்திற்கு மறுசுழற்சிக்கு பயன்படாத 3.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குவதாகவும், அதில் 1.29 மில்லியன் டன் மாசு கடலில் கலப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து பேசிய கடல் உயிரினங்களின் பாதுகாப்பு அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்கள் அனைவருக்கும் பொதுவான எதிரி என்பதை அனைவரும் உணர வேண்டும். அரசாங்கமும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிக்கப்படுகின்றன. என்று தெரிவித்துள்ளனர்