உலகம்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்

ச. முத்துகிருஷ்ணன்

சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதன் காரணமாக அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருப்பதால் அதை ஈடுகட்ட இந்தியாவில் தனது ஐஃபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

உலகளவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது. ஐஃபோன், ஐபேடு உள்ளிட்ட ஆப்பிளின் தயாரிப்புகளில் 90 விழுக்காடு சீனாவில்தான் தயாராகின்றன. ஆனால் சீனாவில் மீண்டும் பரவுவதன் காரணமாக அந்நாட்டில் ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மிக தீவிரமாக உள்ளதால் ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஈடுகட்டும் வகையில் இந்தியாவிலும் வியட்நாம் பிற தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள தனது ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆப்பிள் ஐஃபோன்கள் ஒப்பந்த முறையில் தயாராகின்றன. கடந்தாண்டு ஆப்பிள் ஐஃபோன்களில் 3.1 விழுக்காடு இந்த ஆலையில் தயாரான நிலையில் இந்தாண்டு அது 7 விழுக்காடாக ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.