உலகம்

"கொரோனா உயிரிழப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரமாக உயரும்”- எச்சரிக்கை !

"கொரோனா உயிரிழப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரமாக உயரும்”- எச்சரிக்கை !

jagadeesh

உலகளவில் கொரோனா உயிரிழப்பு இன்னும் சில நாட்களில் 50,000 ஆக உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 187 நாடுகளை சேர்ந்த 47,192 பேர் வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9 லட்சத்து 35 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 155 பேர் இறந்துள்ளதுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 9 ஆயிரத்து 53 பேரும் அமெரிக்காவில் 5 ஆயிரத்து 102 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ், கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

மேலும் தொடர்ந்த அவர் "அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை தொடும். உயிரிழப்வர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும்" என அச்சம் தெரிவித்துள்ளார்.