உலகம்

உலகின் டாப் 10 நிறுவனங்கள்: சந்தை மதிப்பு சரிந்து வருவதால் 11-வது இடத்தில் மெட்டா!

உலகின் டாப் 10 நிறுவனங்கள்: சந்தை மதிப்பு சரிந்து வருவதால் 11-வது இடத்தில் மெட்டா!

EllusamyKarthik

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பங்குகள் தொடர்ந்து சரிவை கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகின் சந்தை மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இருந்த அந்நிறுவனம் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் சுமார் 565 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் தற்போது கொண்டுள்ளது. முன்னர் மெட்டா நிறுவனம் உலக அளவில் ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் டாப் 10 நிறுவனங்கள்! 

>ஆப்பிள் - சந்தை மதிப்பு 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>மைக்ரோசாஃப்ட் - சந்தை மதிப்பு 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>Aramco - சந்தை மதிப்பு 2.0 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>ஆல்பாபெட் - சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>அமேசான் - சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>டெஸ்லா - சந்தை மதிப்பு 905.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>Bershire Hathaway - சந்தை மதிப்பு 700.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>Nvidia - சந்தை மதிப்பு 613.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>TSMC - சந்தை மதிப்பு 600.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 

>டென்சென்ட் - சந்தை மதிப்பு 589.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 

Source: Bloombergquint