உலகம்

திருட்டுப் பயம்: எக்ஸ்ரே மெஷினுக்குள் கைப்பையுடன் நுழைந்த ’உஷார்’ பெண்!

திருட்டுப் பயம்: எக்ஸ்ரே மெஷினுக்குள் கைப்பையுடன் நுழைந்த ’உஷார்’ பெண்!

webteam

திருட்டுப் பயம் காரணமாக, எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் தன் கைப்பையுடன் பெண் ஒருவர் நுழைந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் உள்ளது, டாங்கவுன் ரயில் நிலையம். ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இங்கு லக்கேஜ், கைப்பைகள் சோதனைக்காக எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் கூட்டமாக இருக்கும் இந்த ஸ்டேஷனில், வரிசையில் நின்று பயணிகள் செல்வது வழக்கம். அப்போது கைப்பையை எக்ஸ்ரே மெஷினுக்குள் வைத்துவிட்டு வெளியே நின்றுகொள்வார்கள். ஆனால், அங்கு வந்த பெண்மணி ஒருவருக்கு தனது கைப்பையை தனியாக எக்ஸ்ரே மெஷினுக்குள் விட விருப்பமில்லை. அதில் பணம் இருந்ததால், யாராவது திருடிவிட வாய்ப்பிருக்கிறது என நினைத்தார். இதையடுத்து அந்த அதிரடி முடிவை எடுத்தார். அதாவது கைப்பையுடன் தானும் எக்ஸ்ரே மிஷனுக்குள் நுழைந்தார். அதை பரிசோதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஷாக். மிஷினுக்குள் ஓர் உருவம் வந்துகொண்டிருந்தது! 

பிறகு வெளியே வந்த அவரிடம், ’என்னம்மா இப்படி?’ என்று விசாரித்தால்,’ஆங். திருட்டுப் பயம். என் பைய அப்படியெல்லாம் தனியா விட முடியாது. அதான் நானும் கூடவே வந்தேன்’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.

எக்ஸ்ரே இயந்திரத்தின் கதிர்வீச்சினால் உடல் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைக்காமல் தனது கைப்பையை பற்றியே அந்தப் பெண் பேசியது ரயில்வே ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோ, சீன சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.