சீனாவில், தரையிறங்கிய விமானத்தில் காற்று வாங்குவதற்காக விமானத்தின் எக்சிஸ்ட் கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டார்.
சீனாவின் ஹைனன் தீவில் உள்ள சன்யா நகரில் இருந்து மியான்யங் நகருக்கு சென்ற விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம் மியான்யங்கில் தரையிரங்கிய நிலையில், சீனாவைச் சேர்ந்த சென் என்ற பயணி திடீரென எக்ஸிட் கதவை திறந்துள்ளார். இதனால், விமானத்தின் உள்ளிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமான நிலைய போலீசார் ‘சென்’னை உடனடியாக கைது செய்தனர். பின்னர் அவரை மியாங்யங் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ‘சென்னை 15 நாள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணையின் போது, “எனக்குப் பின்னால் இருந்த கதவை சும்மா அழுத்தினேன். கதவு உடனடியாக திறக்கப்பட்டால், நான் பயந்துவிட்டேன்” என்று சென் கூறியுள்ளார்.
விமானத்தின் வெளியேறும் கதவு சேதம் அடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்ய நிறைய செலவும் ஆகும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், பயணி சென்னுக்கு 70,000 யான் (ரூ.7.34 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டும் இதேபோல் சீனாவைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானம் தரையிரங்கும் போது எக்சிஸ்ட் கதவை திறந்துள்ளார்.