உலகம்

இந்திய ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற்றிய சீன நிறுவனம்

இந்திய ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற்றிய சீன நிறுவனம்

webteam

சீனாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று அங்கு பணிபுரியும் இந்திய வம்சாவளி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - பூட்டான் - சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் குவிக்‍கப்பட்டிருக்‍கும் இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதனால், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய - சீன எல்லை பிரச்னை காரணமாக தோஹா மற்றும் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள  குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.