கடலிலிருந்து 12 டன் தண்ணீரை எடுத்துக்கொண்டு நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை சீனா வடிவமைத்துள்ளது.
AG 600 M என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நீர்நிலைகளில் பயணித்து கொண்டே, 15 விநாடிகளில் 12 டன் தண்ணீரை உறிஞ்சும் திறன் பெற்றுள்ளது. மேலும், அவ்வாறு உறிஞ்சி சேமித்த நீரை, குறிப்பிட்ட இடத்தில் சரியாக கொட்டும் வகையிலும் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The 2nd large fire-fighting rescue amphibious aircraft AG600M "Kunlong" developed by Aviation Industry Corporation of China completed its 1st flight test on Sat. The 3rd & 4th one are expected to make their maiden flights this year & next year. <a href="https://t.co/u0k4bi4xcA">pic.twitter.com/u0k4bi4xcA</a></p>— Zhang Meifang张美芳 (@CGMeifangZhang) <a href="https://twitter.com/CGMeifangZhang/status/1569019384156282882?ref_src=twsrc%5Etfw">September 11, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர் சமயங்களில் இந்த விமானம் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று அந்நாட்டு விமானத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 560 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் உச்சபட்சமாக 20 ஆயிரம் உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.