உலகம்

எல்லையில் ராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவிக்கும் சீனா?

எல்லையில் ராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவிக்கும் சீனா?

PT

இந்திய- சீன எல்லையில் சீனா ஏராளமான ராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. இதனையடுத்து பேசிய நரேந்திர மோடி “ இந்தியா அமைதியான நாடுதான். அதே சமயம் இந்தியாவை தேவையில்லாமல் சீண்டினால் தக்கப் பதிலடி கொடுப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது” எனக் கூறினார். இந்நிலையில் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

சீனா, கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஏராளமான ராணுவ வீரர்களையும் கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக ஓய்வு பெற்ற செயற்கைக்கோள் பட நிபுணர் கோல் விநாயக் பட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ செயற்கைக் கோள் படங்கள் தருகிற தகவல்களின் படி கடந்த சில நாட்களாக சீனா, ஆற்றின் குறுக்கே ஆயதப்படைகளை நிறுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. கட்டமைப்புப் பணிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் அவர்கள் முழு கல்வான் பள்ளத்தாக்கு, ஷியோக் நதியை கைப்பற்ற முயற்சி செய்வதாகத் தெரிகிறது” என்றார்.