உலகம்

நிறைமாத கர்ப்பம்.. பிரசவ வார்டிலேயே தேர்வு .. மிரள வைக்கும் சிகாகோ பெண்ணின் அனுபவம்

நிறைமாத கர்ப்பம்.. பிரசவ வார்டிலேயே தேர்வு .. மிரள வைக்கும் சிகாகோ பெண்ணின் அனுபவம்

EllusamyKarthik

சிகாகோவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வார்டில் தேர்வு எழுதி உலக மக்களின் கவனத்தை தன்பக்கமாக ஈர்த்துள்ளார். 

அண்மையில் அங்குள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஹில். 

முறைப்படி வழக்கறிஞராக பணி செய்ய பார் கவுன்சில் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார் ஹில். 

அந்த தேர்வுக்காக அவர் விண்ணப்பிக்கும் போது கருவுற்றிருந்தார்.

“பார் தேர்வு எழுதும் போது நான் 28 வார கர்ப்பிணியாக இருப்பேன் என நினைத்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தலினால் தேர்வு தள்ளி போனது. இறுதியில் அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதியன்று ஆன்லைன் மூலமாக நாள் ஒன்றுக்கு இரண்டு அமர்வுகளாக மொத்தம் நான்கு அமர்வுகளாக தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. 

அந்த தேதியில் எனது கரு பத்து மாதத்தை எட்டியிருந்தது. தேர்வு எழுதும் போது குழந்தை பிறந்து விடுமோ என்ற பதட்டத்தோடு தான் தேர்வை எழுத துவங்கினேன்.  

நான் பயந்தே படியே முதல் நாள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதே வலி எடுக்க ஆரம்பித்தது. ஆன்லைன் தேர்வில் யாரேனும் கம்யூட்டரில் பார்வைக்கு அப்பால் சென்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது. அதனால் நாற்காலியை விட்டு அசையாமல் எனது கணவருக்கு போன் செய்தேன். 

அவர் வரும் போதே செவிலியரையும் உடன் அழைத்து வந்தார். அவர்கள் என்னை சோதித்து கொண்டிருக்க நான் தேர்வை எழுதிக் கொண்டிருந்தேன். முதல் நாள் தேர்வை முடித்ததும் மருத்துவமனைக்கு விரைந்தோம். மாலையில் அங்கு அட்மிட்டான எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

பின்னர் பிரசவ வார்டில் இருந்தபடி மறுநாள் தேர்வை எழுத்தினேன். தற்போது தேர்வு முடிவுகளுக்காக எனது மகனுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என உள்ளூர் பத்திரிகையில் பேட்டி கொடுத்துள்ளார் ஹில். 

அவரது தளராத மன உறுதியை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் போட்டு அவரை வைரலாக்கி வருகின்றனர்.