உலகம்

பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அடைக்கலம் தரும் கனடா

பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அடைக்கலம் தரும் கனடா

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் கனடாவில் தற்காலிக அடைக்கலம் பெறலாம் என கனடா குடியுரிமை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஓட்டோவாவில் செய்தியாளர்களை சந்தித்த கனடா குடியுரிமை அமைச்சர் அஹமத் ஹுசேன், தன்னுடைய அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி அகதிகளுக்கு தற்காலிக அடைக்கலம் பெற்று தருவேன் என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சிரியா, சோமாலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

இந்த நிலையில் சோமாலியாவை பூர்வீகமாக கொண்ட கனடா குடியுரிமை அமைச்சர் அஹமத் ஹுசேன் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு அடைக்க‌லம் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் இருந்து கனடாவிற்கு வந்து இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் செல்ல எவ்வித தடையும் இல்லை எனவும், அவர் கூறியுள்ளார். முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூவு‌ம், அகதிகளை கனடா ஏற்கும் என கூறி இருந்தார்.