உலகம்

காற்றில் கூட கொரோனா பரவுகிறது ? - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

காற்றில் கூட கொரோனா பரவுகிறது ? - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

webteam

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுவதாக உலக சுகாதார அமைப்புக்கு 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் பயன்படுத்திய அல்லது அவர்கள் தொட்ட பொருட்களை மற்ற நபர்கள் தொட்டு, பின்னர் அவரவர் மூக்கு, கண் அல்லது வாயில் கை வைத்தால் கொரோனா பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதர அமைப்புக்கு எழுதிய கடிதத்தில், காற்றில் பரவும் மிக நுன்னிய கொரோனா வைரஸ் கூட மனிதர்களை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனா பரவும் விதம் குறித்த அறிவுறுத்தலை உலக சுகாதார அமைப்பு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் 32 நாடுகளின் விஞ்ஞானிகள் கூறும் கருத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களின் அருகே நின்றாலோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்றலோ கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதுபோல் உள்ளது.