உலகம்

தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு

தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு

webteam

தாய்ப்பாலை ஏற்றுமதி செய்யும் நடைமுறைக்கு கம்போடிய நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.

பெரும்பாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கம்போடியாவில் இருந்து தாய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அம்ரோஸியா என்ற நிறுவனம் கம்போடியப் பெண்களிடம் இருந்து தாய்ப்பாலைப் பெற்று, பதப்படுத்தி அமெரிக்காவுக்கு அனுப்பி வந்தது. அமெரிக்காவில் தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்னை உள்ள பெண்களுக்கு இது விற்பனை செய்யப்பட்டது. பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால், இந்த நடைமுறை சர்ச்சைக்குள்ளானது. பெண்கள் சுரண்டப்படுவதாகவும், ஏமாற்றப்படுவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவந்தனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் ஒருபகுதியாக சிலர் இதைப் பார்த்தனர். இந்த நிலையில், தாய்ப்பாலை ஏற்றுமதி செய்வதற்கு கம்போடிய அரசு நிரந்தரமாகத் தடை விதித்திருக்கிறது. தாய்ப்பாலை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது சில நாடுகளில் இன்னும் நடைமுறையில் உள்ளது.