உக்ரைன் நாட்டுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கீவ் நகரின் வீதியில் நடந்து சென்றபடி அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியிடம் போர் நிலவரம் குறித்து பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 2 மாதங்களாகி விட்டது. இதனால் உக்ரைனில் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர் தொடங்கிய சில நாட்களிலேயே கீவ் தலைநகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வர உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கீவை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் ஆதரவு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைநகர் கீவ்-க்கு சென்று அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியை சந்திதார். அப்போது இருவரும் கீவ் நகரின் வீதியில் நடந்தவாறு போர் நிலவரம் குறித்து பேசிக் கொண்டனர். அப்போது, போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபரை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
உக்ரைன் மக்களின் நலனுக்காக தொடர்ந்து போரிடுவதற்காக அவர் செலன்ஸிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். போரிஸ் ஜான்சன் கீவ் செல்லும் வரை சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடுமையான போர் சூழலுக்கு இடையே போரிஸ் ஜான்சன் - செலன்ஸ்கி சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
இதையும் படிக்கலாம்: ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா 'சஸ்பெண்ட்'