உலகம்

3வது திருமணம்: தன்னைவிட 24 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் இங்கிலாந்து பிரதமர்!

3வது திருமணம்: தன்னைவிட 24 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் இங்கிலாந்து பிரதமர்!

webteam

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை விட 24 வயது இளையவரான கேரி சைமண்ட்ஸை மூன்றாவதாக திருமணம் செய்ய இருக்கிறார்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவர் போரிஸ் ஜான்சன். இவர் தற்போது மூன்றாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது போரிஸ்-க்கும், கேரி சைமண்ட்ஸ் என்வருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

போரிஸ் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற அலெக்ரா மொஸ்டின் என்பவரை கடந்த 1987-இல் காதலித்து திரும‌ணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த அவர்களது மணவாழ்க்கை 1993-இல் முறிந்தது. அதன் பின்னர் அதே ஆண்டில் வழக்கறிஞர் மெரினா வீலர் என்பவரை போரிஸ் ஜான்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இளம் வயது முதலே நண்பராக இருந்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 4 குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கடந்த 2018-இல் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து தன்னுடன்‌ 2010-ஆம்‌ ஆண்டு முதல் கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய கேரிஸ் சைமண்ட்ஸ் என்பவருடன் போரிஸ் ஜான்சன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பழக்கம் காதலாக மாறவே, லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் லிவ்விங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ள கேரி சைமண்ட்ஸை, போரிஸ் ஜான்சன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதனை கேரி சைமண்ட்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் 200 ஆண்டுகால வரலாற்றில் பிரதமர் பதவியில் இருந்தவாறே திருமணம் செய்து கொள்ளும் முதல் பிரதமர் என்ற பெயரை போரிஸ் ஜான்சன் பெற இருக்கிறார்.