உலகம்

ஆப்கான் அதிபர் பதவியேற்பில் இரு தலைவர்களிடையே போட்டி - விழாவில் குண்டு வெடிப்பு

ஆப்கான் அதிபர் பதவியேற்பில் இரு தலைவர்களிடையே போட்டி - விழாவில் குண்டு வெடிப்பு

webteam

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடித்தது.

ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷரப் கனி பதவி ஏற்கும் விழா இன்று நடைபெற்றது. அப்போது விழா மேடையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று தொடர்ந்து துப்பாக்கிச் சுடும் சத்தங்கள் கேட்டது. பதவியேற்பு விழா நடந்த பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தமும் எழுந்தது. ஆனாலும், அதிபர் அஷரப் கானி கொஞ்சமும் பதற்றமே இல்லாமல் தொடர்ந்து மேடையில் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தானின் போட்டித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான விழாக்களில் இரு அதிபராக பதவியேற்றனர். கடந்த
ஒரு வாரத்திற்கு முன்னர் கையெழுத்தான அமெரிக்கா - தலிபான் இடையிலான ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாக சொல்லப்பட்டது. மேலும், இது ஆப்கானியர்களால் நடத்தப்பட்ட இடைவிடாத போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சிறந்த வாய்ப்பாகவும் கருதப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றியாளராக அதிபர் அஷ்ரப் கனி அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்தத் தேர்தல் தொடர்பாக புகார்கள் எழுந்தன. வாக்களிப்பில் மோசடி நடந்ததாக அஷரப் கனியை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா ஆணையத்தின் மீது புகார் கூறியிருந்தார். ஆனால் இந்த இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்க்க ஆணைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஆகவே இருவரும் ஒரே நேரத்தில் பதவியேற்பு விழாவிற்கான நேரத்தை அறிவித்தனர். திட்டமிட்டபடி இரண்டு விழாக்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. அதிபருக்கான அரண்மனையில் ஒருபக்கம் கானி விழா நடந்தது. மற்றொருபுறம் அப்துல்லாவின் பதவியேற்பு நடந்தது. ஆகவே இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் அங்கே திரண்டிருந்தனர். இந்நிலையில்தான் இந்த விழாவின் போது குண்டு வெடித்துள்ளது. துப்பாக்கிச் சண்டைகளும் நடைபெற்றுள்ளன. இதற்கான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.