உலகின் பணக்கார மனிதர் அந்தஸ்தினை தொடர்ந்து 4ஆவது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தக்க வைத்துக் கொண்டார்.
இதுதொடர்பாக போர்ஃப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் 86 பில்லியன் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் முதலிடத்திலும், அமெரிகத் தொழிலதிபரான வாரென் பஃபெட் 75.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லேரி எல்லீஸன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 220 இடங்கள் பின்தங்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 3.5 பில்லியன் சொத்து மதிப்புடன் 544ஆவது இடம் பிடித்துள்ளார்.