உலகம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகிறார் பிலாவல் புட்டோ

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகிறார் பிலாவல் புட்டோ

JustinDurai

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக பிலாவல் புட்டோ ஓரிரு நாட்களில் பதவி ஏற்க உள்ளார்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியை இழந்துள்ள நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமராகியுள்ளார். ஆனால் ஆளும் கூட்டணியில் 2ஆவது பெரிய கட்சியாக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ அமைச்சராகவில்லை. இதனால் பாகிஸ்தான் அரசை வழிநடத்துவதில் சிக்கல் ஏற்படும் எனத் தகவல் வெளியானது.

இந்த சூழலில் லண்டன் சென்ற பிலாவல் புட்டோ அங்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை சந்தித்து பேசினார். இதன் பின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்க பிலாவல் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமர் ஜமான் கைரா உறுதிப்படுத்தினார். பிலாவல் புட்டோ முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்கலாம்: ‘நான் பதவி விலகப்போவதில்லை; மக்கள் போராட வேண்டியதுதான்’- மகிந்த ராஜபக்ச