உலகம்

இளவரசர் திருமணத்திற்காக வெளியேற்றப்படும் பிச்சைக்காரர்கள்

இளவரசர் திருமணத்திற்காக வெளியேற்றப்படும் பிச்சைக்காரர்கள்

webteam

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்தை முன்னிட்டு பிச்சை எடுப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனின் வைண்ட்ஸரில் பிரட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்கலின் திருமணம் வரும் மே மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வைண்ட்ஸர் நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களால் தற்மசங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவர்களை வெளியேற்ற அந்நகர போலீசாருக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அரச குடும்பத்தினரின் இந்த திடீர் உத்தரவால் அப்பகுதியில் பிச்சை எடுப்பவர்கள் திகைத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, அரச குடும்ப திருமணத்தின்போது பிச்சை எடுப்பவர்களுக்கு தற்காலிக இட வசதி செய்து கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.