உலகம்

வங்கதேசம்: ரம்ஜானை கொண்டாட தலைநகரிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

வங்கதேசம்: ரம்ஜானை கொண்டாட தலைநகரிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

Veeramani

ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வங்கதேசத்தில் மக்கள் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்ப தொடங்கினர். இதனால்  பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில் பெட்டிகளுக்குள் இடம் இல்லாததால் மக்கள் ரயிலுக்கு மேலேயும் அமர்ந்து ஆபத்தான வகையில் பயணிக்கின்றனர்.



ரயில்கள் மட்டுமல்லாமல் படகுகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக ரம்ஜானை சரியாக கொண்டாட முடியாத நிலை இருந்தது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். டாக்காவிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ரம்ஜானுக்காக தொழிலாளர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன. எனவே தலைநகரில் இருந்து பல லட்சம் பேர் ரயில்களிலும், பேருந்துகளிலும், படகுகளிலும் சொந்த ஊருக்கு செல்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க:’செவ்வாய் கிரகத்தில் ஏலியனா!’ - முக்கோண அமைப்பை கண்டு குழம்பி போன நாசா ஆய்வாளர்கள்!