உலகம்

மோரிசனை தோற்கடித்த தொழிலாளர் கட்சி - ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனிஷ்!

மோரிசனை தோற்கடித்த தொழிலாளர் கட்சி - ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனிஷ்!

ச. முத்துகிருஷ்ணன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனை தோற்கடித்து புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார் தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பனிஷ்.

ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. ஸ்கார் மோரிசன் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 72 இடங்களை கைப்பற்றியுள்ளது. 15 இடங்கள் இன்னும் இழுபறி நிலையிலே நீடிக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் ஒற்றை இலக்கங்களில் சில இடங்களை கைப்பற்றி உள்ளன.

ஆட்சியமைக்க 76 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்னும் 4 இடங்களை வென்றால் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி ஆட்சியமைத்து விடும் சூழல் உள்ளது. அக்கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தி அந்தோணி அல்பனிஷ் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்கும் 31வது நபராக அந்தோணி உருவெடுப்பார்.

ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட அந்தோணி அல்பனிஷ் 26 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றிய பிறகு பிரதமர் பதவி என்கிற உச்சத்தை எட்ட உள்ளார். சமீப காலமாக காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் அதிக போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.