உலகம்

சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

webteam

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயிர்ந்துள்ளது. 600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கிரகட்டாவ் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி சுமார் 43 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. இப்போது இந்த உயிரிழப்பு 62 ஆக அதிகரித்துள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்துள்ளன. உயிர்ச் சேத விவரங்கள் முழுமையாக வெளிவரவில்லை. 

இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படடுள்ள ன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்கிடையே சுனாமி வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின் றனர். 

‘’கடற்கரை அருகில் இருந்த ஓட்டலில் தங்கி இருந்தேன். திடீரென அலைகள் 15-ல் இருந்து 20 அடி வரை உயர்ந்து எழும்பிய தைப் பார்த்தேன். பின் தண்ணீர் ஓட்டலுக்குள் புகுந்தது. சுனாமி என்பதை புரிந்துகொண்டு அலறியடித்து ஓடினேன்’’ என்று நார்வே டூரிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்ப்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சுனாமி வரும் போது, ஒரு இடத்தில் இசை கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அலைகள் அந்த இசைக்குழு மீது மோதி, அவர்கள் சரிந்து தத்தளிக்கும் காட்சியின் வீடியோ பதிவுகளும் பதை பதைக்க வைக்கின்றன.