உலகம்

ராமாயண‌த்துடன் தொடங்கிய ஆசியான் உச்சி ‌மாநாடு

ராமாயண‌த்துடன் தொடங்கிய ஆசியான் உச்சி ‌மாநாடு

webteam

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31-‌வது ஆசியான் உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

இதில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மியான்மர், புருனே, பிலிப்பைன்ஸ் உள்பட கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில் ‌நடத்தப்பட்ட ராமாயண கதாபாத்திரங்களை சி‌த்தரிக்கும் ராம ஹரி இசை நிகழ்ச்சி, உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

விழா முடிந்ததும் லாஸ் பனோஸ் சென்று அங்குள்ள அரிசி ஆய்வு கூடத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நெல் வ‌யல் ஆய்வுக்கான பரிசோதனை கூடத்தையும் திறந்து வைத்து, அந்நாட்டு மக்‌களுக்காக அர்ப்பணித்து வைத்தார்.