உலகம்

31வது ஆசியான் மாநாடு நிறைவு: சிங்கப்பூர் தலைமையில் 32வது மாநாடு

31வது ஆசியான் மாநாடு நிறைவு: சிங்கப்பூர் தலைமையில் 32வது மாநாடு

webteam

அடுத்து ஆண்டு நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு சிங்கப்பூர் தலைமை தாங்குகிறது.

மலேசியா, சிங்க‌ப்பூர், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் பங்கேற்ற 31வது ஆசியான் உச்சி மாநாடு நேற்றிரவு நிறைவுபெற்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். 

இந்த மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துதர்தே, மாநாட்டில் ‌பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ‌‌முக்கியமான உடன்பாடுகளை எட்டியுள்ளதாக தெரிவித்தார்‌. அத்துடன் ஆசியான் நாடுகளு‌ம், சீனாவும் பிராந்திய அளவில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை ஒடுக்குவது போன்ற முக்கிய ஒப்பந்தங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.