அமெரிக்காவின் வார இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவை ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்று ஃபார்ட்யூன் (Fortune). இந்த வார இதழ் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக
தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தங்கள் தயாரிப்பின் மூலம் சமூக மாற்றத்தையும், வித்தியாசத்தையும் கொண்டு வந்த வர்த்தக
நிறுவனங்களை தேர்வு செய்து இந்த பட்டியலை ஃபார்ட்யூன் வெளியிடுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்தப்பட்டியலில் கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார்.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை உருவாக்கியவர். இவரின் கதை அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் பேட்மேன் என்ற பெயரில் படமாகவும் வெளியானது.
அருணாச்சலம் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் குறித்து உருவாக்கப்பட்ட ‘பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்துக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இவரது கண்டுபிடிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளது.