உலகம்

‘அது இன்னும் வளர்கிறது’ - நெட்டிசன்களை அலறவைத்த ஆஸ்திரேலிய குடும்பத்தின் செல்லப்பிராணி!

‘அது இன்னும் வளர்கிறது’ - நெட்டிசன்களை அலறவைத்த ஆஸ்திரேலிய குடும்பத்தின் செல்லப்பிராணி!

Sinekadhara

ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பம் ஒரு வருடமாக தாங்கள் செல்லப்பிராணியாக வளர்த்துவரும் பெரிய சிலந்திப்பூச்சியின் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை அதிரவைத்திருக்கின்றனர்.

Summer Stolarcyk என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’க்ரே என்பவரின் வீட்டில் இந்த பிராணி வளருகிறது. அவள் பெயர் சார்லெட்(வேட்டையாடும் சிலந்தி). ஆஸ்திரேலியாவின் க்ரே குடும்பத்தாரால் வரவேற்கப்பட்டுள்ளார். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்று பூச்சிகள் மற்றும் பிறவற்றை உண்பதை சார்லெட் விரும்புகிறாள். அவள் வளர்ந்துகொண்டே இருக்கிறாள். இதுபோன்ற எட்டுக்கால் தேவதைகளை அணைத்துக்கொள்ளுங்கள்’’ என்று எழுதியிருக்கிறது.

இந்த புகைப்படம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளிவருகிறது. மேலும் 1,300க்கும் அதிகமானோர் பகிர்ந்துவருகின்றனர். இதைப்பார்த்து வியந்த நெட்டிசன்கள், ‘’இதுபோன்ற பெரிய சிலந்திப்பூச்சியை எப்படி வீட்டிற்குள் வளர விடுகிறார்கள்?’’, ‘’நான் ஆஸ்திரேலியாவை விட்டு ஏன் வந்தேன் என்று கேட்பவர்களுக்கு பதில், இதுதான் காரணம் என்பதுதான். உங்களுக்குத் தெரியாது. காலை 4 மணிக்கு கண்விழித்தால் இதுபோன்ற ட்யூட்ஸ் சுவரிலிருந்து முறைத்து பார்ப்பார்கள்’, ‘’இதில் சுவாரஸ்யமே இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான்’’ என்பதுபோன்ற தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்திப்பூச்சி இனங்கள் உள்ளன. மேலும் இவற்றில் பல விஷம் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.