உலகம்

சவப்பெட்டிக்குள் 50 மணிநேரம்; வீடியோ வெளியிட்டு வியூஸ்களை தெறிக்கவிட்ட அமெரிக்க யூடியூபர்

சவப்பெட்டிக்குள் 50 மணிநேரம்; வீடியோ வெளியிட்டு வியூஸ்களை தெறிக்கவிட்ட அமெரிக்க யூடியூபர்

EllusamyKarthik

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன்.  மிஸ்டர் பீஸ்ட் என பரவலாக அறியப்படுபவர் அவர். இந்நிலையில் சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபட்ட அனுபவத்தை அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ 50 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. 

முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமிராவும் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் உதவியோடு இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். 22 வயதான அவர் சவப்பெட்டிக்குள் இரண்டு நாட்களுக்கும் கூடுதலான நேரத்தை செலவிட்டுள்ளார். 

“எனது முதுகு ரொம்பவே வலிக்கிறது. நான் பீதியில் உறைந்து போயுள்ளேன். மனதளவில் வெறுமையாக உணர்கிறேன். இந்த அனுபவம் ரொம்பவே மோசமாக உள்ளது”  என அவர் தெரிவித்துள்ளார். 

வழக்கமாக அவரது வீடியோக்கள் 30 மில்லியன்ஸ் வியூஸ்களை எட்டுமாம். சில வீடியோக்கள் 100 மில்லியன்களை கூட கடந்தது உண்டாம். தற்போது அமெரிக்காவின் நகரங்களில் மிஸ்டர் பீஸிட்பர்கர்ஸ் என்ற உணவு கடையை நிறுவியுள்ளாராம் அவர்.