உலகம்

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

webteam

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உலகின் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைத்து நாடுகளும் படிப்படியாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை உலகில் 56,37,380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 24,04,510 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடுதிரும்பியுள்ளனர். அதேசமயம் 3,49,291 உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்பில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்களாக உள்ளனர். அங்கு இதுவரை 17,13,000 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக அங்கு 6,774 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 1,00,021 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 216 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 4,68,669 பேர் மட்டுமே சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்வது குறிப்பிடத்தக்கது.