உலகம்

பாகிஸ்தானை கண்காணிக்க இந்தியா உதவுகிறது: அமெரிக்க தூதர்

பாகிஸ்தானை கண்காணிக்க இந்தியா உதவுகிறது: அமெரிக்க தூதர்

webteam

பாகிஸ்தானை கண்காணிப்பதற்கும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியா உதவுகிறது என அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிக்கி, ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா உதவுவதற்கு இந்தியா உறுதுணையாக உள்ளது என்றும், ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா பெரிதளவும் பொருளாதார உதவிகளை புரிவதாகவும் கூறினார். இந்தியாவுடன் நல்லுறுவு பேணுவதன் மூலம் ஆப்கானிஸ்தானிலும், தெற்கு ஆசியாவிலும் உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க முடிகிறது என ட்ரம்ப் கூறியாதாக நிக்கி தெரிவித்தார். இதன்மூலம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதிகளை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாகிஸ்தானை கண்காணிப்பதற்கும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியா மிகவும் உதவுவதாக அவர் தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பலப்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்ததாக நிக்கி சுட்டிக்காட்டினார். இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானுடனும் அமெரிக்கா நட்புறவில் உள்ளது என்றும், பாகிஸ்தானையும் அமெரிக்கா மதிப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கும் என்றால் அது கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் தெரிவித்தார்.