உலகம்

அமேசான் காடுகளில் கனிமச் சுரங்கங்கள் அமைக்க அனுமதி

அமேசான் காடுகளில் கனிமச் சுரங்கங்கள் அமைக்க அனுமதி

webteam

அமேசான் காடுகளில் பெரும்பகுதியில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கு பிரேசில் நாட்டு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. 

இந்தப் பகுதிகளில் தங்கம் உள்ளிட்ட மதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கனிமங்கள் எடுக்கப்படுவதால், பூர்வகுடிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அரசின் முடிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். 

தற்போது கனிமங்கள் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தின் மொத்தப் பரப்பு 46 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் தூரம் படர்ந்திருக்கும் அமேசான் மழைக்காடுகளால்தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.