அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைவருமான சீன தொழிலதிபர் ஜாக் மா கடந்த 2020 அக்டோபர் முதல் பொதுவெளியில் தோன்றாமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவர் ஓவியம் வரைவதில் நேரம் செலவிட்டு வருவதாக அலிபாபாவின் துணைத் தலைவர் ஜோ சாய் தெரிவித்துள்ளார்.
“நான் அவருடன் தினமும் பேசி வருகிறேன். ஓவியம் வரைவதில் பொழுதை செலவிட்டு வருகிறார். சமூக பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். நம் எல்லோரையும் போல யவரும் சாதாரண ஒரு மனிதர். இப்போதைக்கு எங்களது வர்த்தகத்தில் சற்று பின்னடைவுதான். இருந்தாலும் வரும் நாட்களில் அவை யாவும் சரியாகும்” என ஜோ சாய் தெரிவித்துள்ளார்.
சீன அரசுக்கு எதிராக பேசியதால் ஜாக் மா தலைமறைவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தனது சொத்து மதிப்பில் இந்த ஒரு ஆண்டு காலத்தில் சரிபாதியை அவர் இழந்துள்ளதாக தெரிகிறது.